மேட்டூர்: மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத ₹1 லட்சத்து 89 ஆயிரத்து 200 கைப்பற்றப்பட்டது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பொறுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று பிற்பகல், திடீரென சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்தனர்.