தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை நீடிப்பு.: 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

கும்பகோணம்: தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் வீடுகள் இடிந்து விழுந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எலுமிச்சைக்காய் பாளையம் ஜீவஜோதி நகரில் வீடு இடிந்து விழுந்ததால் முதியவர் குப்புசாமி அவரது மனைவி யசோதா சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். அவர்களின் உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமாத்துர் கிராமத்தை சேர்ந்த சரத் என்பவர் அதிகாலை வீட்டை விட்டு வெளிய வந்தபோது கனமழையினால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவரது உடலை போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

நகையில் புதிய நம்பியார் சுனாமி குடியிருப்பில் சந்திரபாபு என்பவற்றின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது. அப்போது சமையல் செய்துகொண்டியிந்த அவரது மனைவி மயிரிலையில் உயிர் தப்பியுள்ளார். மேலும் அதே பகுதியில் மற்றோரு வீட்டின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது. இதனால் சேதம் அடைந்த வீடுகளை தரமாக புதுப்பித்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: