ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் நீடிப்பதால் மிக கனமழை தொடரும்.: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: மன்னர் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் நீடிப்பதால் மிக கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு தென்மேற்கு 40கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு மேற்கு-தென்மேற்கில் 70 கி.மீ தொலைவிலும்  நிலை கொண்டுள்ளது. தற்போது காற்றின் வேகம் 55 கி.மீ முதல் 65  கி.மீ  வரை வீசி வருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ  வரை வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விவரங்கள் பின்வருமாறு:

* கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. கொத்தவச்சேரி-34 செ.மீ, அண்ணாமலை நகர்-33 செ.மீ, லால்பேட்டை-30 செ.மீ, பரங்கிப்பேட்டை-26 செ.மீ மற்றும் காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதியில் -25 செ.மீ மழையும், சேத்தியாத்தோப்பு-21 செ.மீ, புவனகிரியில்-19 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

* திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ மழை பதிவு. குடவாசல்-21செ.மீ, நன்னிலம்-14 செ.மீ, வலங்கைமான்-13செ.மீ, திருவாரூரில்-11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

* ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 20 செ.மீ மழை பொழிந்துள்ளது. தங்கச்சிமடம்-9 செ.மீ, பாம்பனில் 7.7 செ.மீ மழை பதிவு.

* மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ, மணல்மேடு-25 செ.மீ, சீர்காழி-21 செ.மீ மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: