கோஹ்லி 12,000

இந்திய அணி கேப்டன் கோஹ்லி, நேற்று 23 ரன் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் விரைவாக 12,000 ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர் தனது 242வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். முன்னதாக, சச்சின்  தனது 300வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருந்தார்.

* அறிமுக வீரராக களமிறங்கிய நடராஜனுக்கு இந்திய அணியின் தொப்பியை கேப்டன் கோஹ்லி வழங்கி வாழ்த்தினார். ஆஸி. அறிமுகம் கிரீனுக்கான தொப்பியை ஸ்மித் வழங்கினார்.

* இந்திய அணிக்கு இது 990வது ஒருநாள் போட்டி. இந்த போட்டி மூலம் 11வது இடது கை வேகப் பந்துவீச்சாளராக நடராஜன் அறிமுகமாகி உள்ளார். ஏற்கனவே காவ்ரி, ஆர்.பி.சிங், ரஷித் படேல், நெஹ்ரா, இர்பான், உனத்கட், பரீந்தர் சிங், கலீல்  அகமது ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடிய இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள். தமிழகத்தில் இருந்து இந்திய அணியில் இடம் பெறும் 5வது வேகப் பந்துவீச்சாளர் நடராஜன்.

* ஹர்திக் - ஜடேஜா ஜோடி சேர்த்த 150 ரன், இந்திய வீரர்கள் 6வது விக்கெட்டுக்கு எடுத்த 3வது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக ராயுடு - ஸ்டூவர்ட் பின்னி இணை 2015ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 160 ரன் குவித்தது முதல்  இடத்தில் இருக்கிறது. அடுத்து 2வது இடத்தில் 2005ல் ஜிம்பாப்வேக்கு எதிராக யுவராஜ் - டோனி குவித்த 158 ரன் உள்ளது.

* ஹர்திக் இதுவரை 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த போட்டியில் எடுத்த 92*ரன் தான் அவரது அதிகபட்சமாகும். இதே தொடரின் முதல் போட்டியில் அவர் 90 ரன் எடுத்திருந்தார்.

Related Stories: