ஒரே நாளில் 3,944 பேர் பாதிப்பு: டெல்லியில் கொரோனா பாதிப்பு 5.78 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.!!!

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.38 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 94.99 லட்சத்தை தாண்டியது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 89,32,647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4,28,644 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

கொரோனா நோய்க்கு எதிராக சரியான தடுப்பு மருந்து இல்லாததால் நோய் தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் அவதிக்குள்ளாகி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இதனிடையே டெல்லியை பொறுத்தவரை கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 5,78,324-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 9,342-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 5,329 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் இதுவரை 5,38,680 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் தற்போது 30,302 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: