மின்னணு பரிமாற்ற தபால் மூலமாக தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டு: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: ‘தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தலில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மின்னணு பரிமாற்ற தபால் ஓட்டு மூலமாக வாக்கப்பளிப்பதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் இருக்கிறது,’ என தலைமை தேர்தல் ஆணையம் ெதரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும், மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவர்களை வாக்களிக்க அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மத்திய சட்ட அமைச்சகம் சமீபத்தில் கருத்து கேட்டது. இதற்கு, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று பதில் அனுப்பியது.

அதில், ‘அடுத்தாண்டு தமிழகம், அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில்  சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் உட்பட நாட்டில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முதல் சட்டப்பேரவை தேர்தல்கள் வரை,  அனைத்திலும் வெளிநாடு வாழ் இந்தியர்களை மின்னணு தபால் ஓட்டு மூலமாக வாக்களிக்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு தரப்பில் உரிய சட்ட விதிமுறைகளை கொண்டு வரும் பட்சத்தில், அவர்களை வரும் தேர்தல்களில் வாக்களிக்க வைப்பது சாத்தியமான ஒன்றாகும்,’ என கூறப்பபட்டுள்ளது.

* இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர், பல்வேறு வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.

* அவர்களுக்கு இங்கு வாக்குரிமை இருந்த போதிலும், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கொண்டு வந்து வாக்களிக்க பெரும்பாலோர் விரும்புவது இல்லை.

* கடந்த மக்களவை தேர்தலில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் மட்டுமே, இந்தியாவுக்கு வந்து வாக்களித்து விட்டு சென்றதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

* மின்னணு பரிமாற்ற தபால் ஓட்டு நடைமுறை’ தற்போது, ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Related Stories: