கிராம பஞ்சாயத்து தேர்தலுக்காக பதட்டமான வாக்குசாவடிகள் கண்காணிப்பு: குடகு மாவட்ட கலெக்டர் விளக்கம்

குடகு: மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலுக்காக பதட்டமான வாக்குசாவடிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று மாவட்ட  கலெக்டர் அனிஸ் கண்மணி ஜாய் தெரிவித்தார். குடகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தல் ெதாடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம்  அவர் கூறுகையில்,மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலை டிசம்பர் 22 மற்றும்  27 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி குடகு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 104 கிராம பஞ்சாயத்துகளில் 101 கிராம  பஞ்சாயத்துகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 22ம் தேதி மடிக்கேரி மற்றும் சோமவாரபேட்டை  தாலுகாவில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கும், இரண்டாவது கட்டமாக டிசம்பர் 27ம் தேதி வீராஜ்பேட்டை தாலுகாவில் உள்ள கிராம  பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

கிராம பஞ்சாயத்து தேர்தலில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் நேர்மையான முறையில் நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.  குடகு மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களில் மொத்தம் 3,66,013 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,81,443 ஆண் வாக்காளர்களும், 1,74,570 பெண்  வாக்காளர்கள் அடங்குவர். பதட்டமான வாக்குசாவடிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். கிராம பஞ்சாயத்து தேர்தலில் பொதுமக்கள்  கொரோனா அச்சமின்றி வாக்களிக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ேமற்கொள்ளப்படும். அனைத்து வாக்கு சாவடிகளிலும் கொரோனா தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Related Stories: