வேறு நபரின் சொத்து மீது ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் 6.70 கோடி கடன் பெற்று மோசடி :பலே ஆசாமி சிக்கினார்

புதுடெல்லி: ஆள்மாறாட்டம் செய்து வேறொருவரின் சொத்தை வங்கியில் அடகுவைத்து  6.70 கோடி வீட்டு கடன் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த ரீட்டா பாபர் என்பவருக்கு சொந்தமான வீடு கிழக்கு டெல்லியின் சூரஜ்மால் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை பாபர் கடந்த 2014ம் ஆண்டு ராகுல் சர்மா, சச்சின் சர்மா மற்றும் இவர்களது தந்தை மங்கேராம் சர்மா ஆகியோருக்கு வாடகைக்கு விட்டார். கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்ததை  தொடர்ந்து வாடகைகான ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தொடர்ந்து வசித்தனர். இந்தநிலையில், கடந்த 2016ம் ஆண்டு ஜூலையில் ரீட்டாவின் கணவருக்கு நிதி நிறுவனத்திடமிருந்து போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சூரஜ்மால் வீ்ட்டின் பேரில் 2.25 கோடி வீட்டு கடன் பெற்றுள்ளதாகவும் தற்போது தவணையை கட்டவில்லை என்றும் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறினர்.

இதனர் அதிர்ச்சியடைந்தா ரீட்டாவின் கணவர், இதுபற்றி மேற்கொண்டு விசாரித்த போது, அந்த வீட்டின் பேரில் மேலும் இரண்டு நிதி நிறுவனங்களில் முறையே  2.19 கோடி மற்றும் 2.25 கோடி கடன் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து ரீட்டா போலிசில்புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் சுனில் ஆனந்த் என்பரை கைது செய்தார். இவர், ராகுல் சர்மாவின் பேரில் போலி ஆவணங்களை தயார் செய்து வங்கிகளில சமர்பித்து கடன்பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக இணை கமிஷனர்(பொருளாதார குற்றப்பிரிவு) ஓபி சர்மா தெரிவித்தார். மேலும், விசாரணையில், மூன்று பேர் சேர்ந்து இந்த போலி ஆவணங்களை தயாரித்துள்ளதும், ரீட்டாவின் கணவர் பாபா் இறந்துவிட்டதாக கூறி சான்றிதழ் பெற்று மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மங்கோ ராம் சர்மா கடந்த 2015ல் இறந்துவிட்டார். அவரது மகன் ராகுல் சர்மா ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: