நிவாரண நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை: பிடிஏ தலைவர் எஸ்ஆர் விஸ்வநாத் எச்சரிக்கை

பெங்களூரு: நிதிமுறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என பிடிஏ தலைவர் எஸ்ஆர் விஸ்வநாத் கூறினார்.  பெங்களூரு வளர்ச்சி கழகம் (பிடிஏ) தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்ஆர் விஸ்வநாத் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் எஸ்ஆர் விஸ்வநாத் கூறியதாவது:  பெங்களூரு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அனுமதி பெறாமல் லே அவுட் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு காரணமாக நபர்கள்  யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்.  பிடிஏ சார்பில் லே அவுட் அமைப்பதற்கு நிலம் வழங்கிய நபர்களுக்கு அதற்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படுகிறது. அத்துடன் குடியிருப்பு மனையும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதை தவறாக பயன்படுத்தி சிலர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

நிவாரண தொகை வழங்கப்பட்ட நிலையில் மறுபடியும் பிடிஏ விடம் இருந்து  நிவாரண தொகை பெற்று முறைகேடும் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது போன்ற முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பிடிஏ முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும  என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்  முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்ஆர் விஸ்வநாத் கூறினார். பிடிஏ கமிஷனர் டாக்டர் எச்.ஆர். மகதேவ் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

பிடிஏ முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்

Related Stories: