11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தாண்டுதான் மாணவர் சேர்க்கை தொடங்கும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!

மதுரை: 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தாண்டுதான் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கைக்கு  உத்தரவிடக் கோரி வாசுதேவன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், தற்போது அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் காணொலி வழியாகவே வகுப்புகள் நடைபெறுகின்றன. இதனால் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து முதலாம் ஆண்டு வகுப்புகளை காணொலியில் நடத்தலாம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

இதற்கு அரசு தரப்பில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தாண்டுதான் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் நீதிபதிகள் கூறியதாவது: போதுமான உட்கட்டமைப்பு இன்றி கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதி தர வேண்டாம் பொறியியல் கல்லூரிகளை போல மருத்துவ கல்லூரிகளும் அதிகரித்து விடும் என்பதால் அனுமதிக்க கூடாது என்று நீதிபதிகள் வலியுறுத்தி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: