நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 10 மணி வரை சூழலுக்கு ஏற்ப ரயில் சேவை இருக்கும் எனவும் கூறியுள்ளது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேளச்சேரி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்களை இருமார்கத்திலும் நாளை ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில் மார்க்கத்தில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், வருகிற 2020 நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சூளூர்பேட்டை வரை இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி  ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை  இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சூளூர்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை  இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: