புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் நிலை: கலெக்டர் தகவல்

பொன்னேரி: பழவேற்காடு மீனவ கிராமங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பொன்னையா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “மீனவர்கள் யாரும் வரும் 26ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் தீவிரமாகும் பட்சத்தில் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும் மீனவர்களை தங்க வைக்க 4 புயல் நிவாரண மையம், 26 திருமண மண்டபங்கள், 6 கல்லூரிகள் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்பேரில் பேரிடர் மீட்பு குழுவினர் மாவட்டத்திற்கு வரவழைக்கப்படுவார்கள். புயல், வெள்ளம் அதிகரிக்கும் நிலையில் தன்னார்வலர்கள் மூலம் கிராமங்களில் இருந்து மீனவர்களை நிவாரண மையங்களுக்கு அழைத்து வந்து தங்கவைக்க வருவாய்த்துறை தயார் நிலையில் உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: