ஜனவரி அல்லது பிப்ரவரியில் பாதி விலையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி: சீரம் நிறுவன அதிகாரி தகவல்

லண்டன்: ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதிவிலையில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி  ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீதம் அளவிற்கு  விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைய உள்ள நிலையில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், சீரம் நிறுவனத்துக்கு இந்த மருந்து இரண்டு மாதங்களில் கிடைக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ.500 அல்லது 600 ரூபாயில் இந்தியாவுக்கு பாதி விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மார்ச் - ஏப்ரல் 2021ம் ஆண்டுக்குள் ‘கோவிஷீல்டு’  மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய இந்த தடுப்பூசி, பொது  மக்களுக்கு தனியார் சந்தையில் ரூ .500 முதல் 600 வரை கிடைக்கும் என்று  சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>