டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை; அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி, :டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்போர் எண்ணிக்கை 200ல் இருந்து 50 ஆக குறைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லி மார்க்கெட்டில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பது தெரிந்தது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே தொற்று பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு இல்லை. நாங்கள் வரும் நாட்களில் நிலைமையை கவனிப்போம். அதன்படி மதிப்பீடு செய்வோம். பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவது இப்போதே நமது முன்னுரிமை. மிகவும் அவசியமில்லை என்றால், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். ஆனால் இப்போது மத்திய அரசுக்கு மட்டுமே கடிதம் எழுதியுள்ளோம், ”என்றார்.

டெல்லியில் ஒரே நாளில் 131 பேர் பலி

டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 131 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 15 நாட்களில் ஒரு லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மாநில அரசும், சுகாதார துறையும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories: