இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை பயங்கரவாதம்: 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ரஷ்யா: இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை பயங்கரவாதம் என பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷிஜின் பிங், பிரேசில் அதிபர் பொல்சனரோ உள்ளிட்டோர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.  பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் பொறுப்புக் கூறப்படுவதையும், இந்த பிரச்சினை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கையாளப்படுவதையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறினார். 2021 ஆம் ஆண்டில், பிரிக்ஸ் 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் என கூறினார். கடந்த ஆண்டுகளில் நாங்கள் எடுத்த பல்வேறு முடிவுகளை மதிப்பீடு செய்ய எங்கள் ஷெர்பாக்கள் ஒரு அறிக்கையை உருவாக்க முடியும் என கூறினார். ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என கூறினார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றது. ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றது. உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாடு, ரஷ்யா தலைமையில் நடைபெறுகிறது.

Related Stories: