மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் புதிய பாடத்திட்ட குழுமக் கூட்டம்: அருந்ததி ராயின் 'வாக்கிங் வித் காம்ரேட்ஸ்'புத்தகத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக தகவல்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்ட குழுமக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக அமைக்கப்படும் பாடத்திட்ட குழுமத்திற்கு பேராசிரியர் பிரபாகரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு கூடுகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்ட குழுமக் கூட்டம் முதன்முறையாக இன்று ஆன்லைன் மூலம் கூடப்பட்டுள்ளது. அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேட்ஸ் என்ற புத்தகத்தை பல்கலைக்கழக பாடப்பகுதியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பும் பேராசிரியர் பிரபாகரன் தலைமையில் உள்ள 15 பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவில் பேராசிரியர்கள், வெளி மாநிலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள் என பல்வேறு பிரிவினை சேர்ந்தவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்குழுவானது பொதுவாக, வரும் கல்வியாண்டில் புதிய பாடதிட்டங்ளை பல்கலைக்கழகத்தில் எவ்விதமாக அமைக்கலாம் என்பது தொடர்பான அனுமதியை வழங்கும். ஆனால் முதல்முறையாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 - 18ம் ஆண்டு உள்ள பாடத்திட்டத்தை அகற்றுவதற்காக இந்த கூட்டம் கூடுகிறது. இதற்கு கல்வியாளர்கள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் தன்னிச்சையாக நீக்கிவிட்டு தற்போது அதனை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்காகவே இக்கூட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக கூட்டுவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இக்கூட்டம் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Related Stories: