திருவள்ளூர் மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 31,180 பெண் வாக்காளர்கள் அதிகம்

திருவள்ளுர்:  திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், 01.01.2021-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 10 சட்டமன்ற  தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டார். திருவள்ளுர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட  கலெக்டர் அலுவலகம், திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி, அம்பத்தூர் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள்,   சென்னை பெருநகர மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல அலுவலர் -1, சென்னை பெருநகர மாநகராட்சி, அம்பத்தூர் மண்டல அலுவலர் -7, உதவி  வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர் அலுவலகங்கள், ஆவடி மாநகராட்சி மற்றும் திருவள்ளுர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும்  நிர்ணயிக்கப்பட்ட இடங்களான 3622 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 1205 பள்ளிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளர் பட்டியலானது ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உள்ளது.   மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் 2021-ஐ பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல்,  திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.01.01.2021-ஆம் தேதியன்று 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமலிருந்தால் தற்போது  புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ம், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் முதலியவற்றுக்கு திருத்தம்  மேற்கொள்ள விரும்புபவர்கள் படிவம் 8 ம், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய  விரும்புபவர்கள் படிவம் 8 யு -ம், தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்ட இடங்களான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள  பள்ளிகளில் 16.11.2020 முதல் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், சிறப்பு முகாம் நாட்களான  21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி  வரையிலும் நேரில் ஆஜராகி படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.  

பிறந்த தேதி மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவணங்களின்  நகல்களுடன் மீள அளித்து தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா  தெரிவித்துள்ளார்.

Related Stories: