ஒப்புகை சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவது மக்களின் ஐயத்தை போக்கும்: ராமதாஸ் டிவிட்

சென்னை: ஒப்புகை சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதே மக்களின் ஐயத்தை போக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கு பதிலாக ஒப்புகைச்  சீட்டுகளைத்தான் எண்ண வேண்டும் என்று ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ள கருத்துகள் சரியானவை,  வரவேற்கத்தக்கவை.

கருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை, திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை  ஏற்படுத்தக்கூடும் என்பதால்

அவை தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான  வாக்குகளை எண்ணுவது ஐயங்களைப் போக்கும். தேர்தல் முடிவுகள் மிகவும் வெளிப்படையாக அமைவதை உறுதி செய்யும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: