பீகார் முதல்வராக தொடர்ந்து 4 வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்; முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை : பீகார் முதலமைச்சராக பதவி ஏற்கும் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி, இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்ற நிலையில், நிதிஷ் குமார் இன்று மாலை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

 நிதிஷ் குமாருக்கும் அவரது மந்திரிசபையில் இடம்பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நிதிஷ் குமாருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது, நிதிஷ்குமார் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 7-வது முறையாகவும், ஏற்கனவே 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில், பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் நான்காவது முறையாக பொறுப்பேற்றதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன், உங்களுக்கு ஒரு வெற்றிகரமான பதவிக்காலத்தை விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: