திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான கந்தசுவாமி திருக்கோயில் திருப்போரூரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழாவும், மாசி மாதத்தில் பதிமூன்று நாட்கள் பிரம்மோற்சவமும் நடைபெறும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கொடியேற்றத்தின்போது அனுமதிக்கப்படவில்லை.        சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓத கோயில் அர்ச்சகர்கள் கொடி மரத்தில் கொடியை ஏற்றினர்.

இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பக்தர்களும் காணும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் நேரலை செய்யப்பட்டது. மேலும், தினந்தோறும் நடைபெறும் சுவாமி வீதி உலா மற்றும் லட்சார்ச்சனை போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 20ம் தேதி ஆறாம் நாள் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார திருவிழா பக்தர்கள் வருகை இல்லாமல் கோயில் வளாகத்தின் உள்ளேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: