அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டு கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தனியார் டிவி சேனல் நிர்வாகி அர்னாப் கோஸ்வாமியை கடந்த 4ம் தேதி அலிபாக் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்திருந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிராகரித்து விட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற சிறப்பு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வழங்கிய உத்தரவில்,” அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இதில் அவர் பிணையத் தொகையாக ரூ.50 ஆயிரத்தை சிறைத்துறை அதிகாரிகளிடம் செலுத்த வேண்டும். காவல் துறை வழக்கு தொடர்பாக அழைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ அனுமதியில்லாமல் செல்லக் கூடாது’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், மும்பை உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை விதித்து என வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: