ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளின் ‘மகாபந்தன்’ கூட்டணி தோற்றது ஏன்?

பாட்னா: ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ‘கிராண்ட் அலையன்ஸ்’ எனப்படும் மகாபந்தன் கூட்டணி தோற்றது ஏன்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகார் தேர்தல் முடிவு ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு சாதகமாக வந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியதற்கான பலவிதமான காரணங்கள் ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ‘கிராண்ட் அலையன்ஸ்’ எனப்படும் மகாபந்தன் கூட்டணியில் சரியான மற்றும் சரிபலத்துடன் கூடிய தலைமை இல்லை.

இந்த கூட்டணியில் மிகப்பெரிய கட்சிகள் இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார உத்திகள் கைகொடுக்கவில்லை. மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி மாநிலத்தில் எங்கும் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்ளவில்லை. மேலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் லாலுவின் மகனான தேஜஸ்வி, கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் அதிக இடங்களை கைப்பற்றியிருந்தாலும் அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது சில தலைவர்கள் மத்தியில் எடுபடவில்லை. ‘கிராண்ட் அலையன்ஸ்’ கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் விமர்சிக்கப்பட்டு வந்தன. மேலும், இந்த முறை பீகாரில் 70 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.

ஆனால், 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியின் சீட் ஒதுக்கீடு தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டன. மொத்தத்தில், மொத்தமுள்ள 243 இடங்களில் 70 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வழங்கப்பட்டன? என்ற கேள்வியும் காங்கிரஸ் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் நிதிஷ் தலைமையில் பாஜக ேதர்தலை சந்தித்தாக கூறினாலும், மக்கள் ஜேடியூ-வை விட பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்கினர். அதற்கு காரணம், வாக்காளர் பாஜகவின்அறிவிப்புகள் மற்றும் வாக்குறுதிகளை நம்பியதாக கூறப்படுகிறது.

Related Stories: