போடி அருகே கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு

போடி: போடி அருகே, மீனாட்சிபுரத்தில் 150 ஏக்கரில் மீனாட்சியம்மன் கண்மாய் அமைந்துள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம்  ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மழை காலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலை சாம்பலாறு தடுப்பணை தாண்டி வரும் காட்டாற்று  வெள்ளம் கொட்டகுடி ஆற்றில் பாய்ந்து பின்னர் வைகை அணையில் கலக்கிறது. இதனால், கொட்டகுடி ஆற்று தண்ணீரை இந்த  கண்மாயில் தேக்குவர். கடந்த மாதங்களில் மழை பெய்தபோது மீனாட்சியம்மன் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

 இதனால், கண்மாய் வறண்டு கிடந்தது.இந்நிலையில், மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய் நீரை நம்பி முந்தல் துவங்கி கூழையனூர் வரை 1500  ஏக்கரில் ஒருபோக நெல் சாகுபடி செய்துள்ளனர்.

கண்மாய்கள் வறண்டு கிடக்கும் நிலையில், ஒரு போக சாகுபடி வீடு வந்து சேருமா  என விவசாயிகள் கவலையடைந்தனர். இது குறித்து நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. கடந்த சில  தினங்களாக பெய்த மழையால் கொட்டகுடி ஆற்றில் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், நெல் நடவு செய்த  விவசாயிகள், மீனாட்சியம்மன் கண்மாய்க்கு கொட்டகுடி ஆற்றில் வரும் தண்ணீரை திறந்துவிட போடி தாசில்தார்  மணிமாறனிடம் மனு அளித்தனர். தன்பேரில், போடி சாலைக்காளியம்மான் கோயில் உள்ள ஷட்டரை திறந்து, கொட்டகுடி  ஆற்று தண்ணீர் கால்வாய் வழியாக மீனாட்சியம்மன் கண்மாய்க்கு செல்ல நேற்று நடவடிக்கை எடுத்தனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.    

Related Stories: