ஓடிடி இயங்கு தளங்கள் அனைத்தும் தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியீடு.!!!

டெல்லி: இணையதளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அனைத்தையும் மத்திய அரசின் தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் மட்டும் திரைப்படம் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது, ஓடிடி தளத்தில் அதிகமாக திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியீடுவது அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு தணிக்கை அவசியம் இல்லை என்று இருக்கிறது. நெட்விக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் அதிகமாக வெளியிடப்படுகிறது. இதனால், வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதால் ஓடிடி தளங்களுக்கு தணிக்கை உட்படுத்த வேண்டும் என ஏற்கனவே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம், ஓடிடி இயங்கு தளங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள் ஆகியவை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது, ஓடிடி தளங்களுக்கான கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரத்தை அமைச்சகம் பெறுவதாகவும், இந்த புதிய நடவடிக்கை குறித்து ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசின் உத்தரவு காரணமாக ஆன்லைன் செய்திகளுக்கும் விதிமுறைகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: