எல்லையை தாண்டி சென்றதாக தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை மடக்கியது: படகுகள் பறிமுதல்

காரைக்கால்: எல்லையை தாண்டி சென்றதாக தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்து சென்றனர். அவர்களிடமிருந்து படகுகளை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன் பிடி சீசன் தொடங்கியுள்ளது. இங்கு நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தரங்கம்பாடியை சேர்ந்த பாண்டியனின் பைபர் படகில் முத்துலிங்கம் (28), ராஜு (24), ரஞ்சித் (18), முருகன் (36) ஆகிய 4 பேர் கடந்த 7ம்தேதி மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 9ம்தேதி காலை கரை திரும்ப வேண்டும்.

ஆனால் படகு இன்ஜின் பழுதாகி காற்றின் வேகத்தால் இலங்கை காங்கேசன் துறைமுக கடற்கரைக்கு சென்றுவிட்டனர். இவர்களை பார்த்த இலங்கை கடற்படையினர் 4 பேரையும் மடக்கி பிடித்து படகை பறிமுதல் செய்ததோடு, காங்கேசன் துறைமுகம் கப்பற்படை முகாமில் வைத்து விசாரித்து வருகின்றனர். அதே போல், காரைக்கால் காட்டுச்சேரிமேடு பகுதியை சேர்ந்த சரவணனின் படகில் 11 பேர் கடந்த 8ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்று பலமாக வீதியதால் படகு கோடியக்கரையை அடுத்துள்ள இலங்கை எல்லை அருகே சென்றது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும் பிடித்து அவர்களது படகை பறிமுதல் செய்ததோடு, காங்கேசன் துறைமுகம் கப்பற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: