போக்குவரத்து நெரிசலை குறைக்க பகண்டை கூட்டு சாலையில் வாகனம் நிறுத்த கட்டுப்பாடு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டு சாலையில் உள்ள முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டன. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி ராஜி ஆலோசனைப்படி பகண்டை கூட்டு சாலையில் உள்ள திருக்கோவிலூர்- சங்கராபுரம்- தியாகதுருகம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்த கட்டுப்பாடுகளை விதித்து கயிறு அமைக்கும் பணி நடைபெற்றது.

பகண்டை கூட்டு சாலை காவல் உதவி ஆய்வாளர் கோபி தலைமையில் உதவி ஆய்வாளர் பச்சையப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் வீரன், தனிப்பிரிவு காவலர் சுந்தர் மற்றும் காவலர்கள் சந்தியாகு, ஹரிதாஸ், சந்திரசேகர், செல்வம், சையத்பாதுஷா, அழகப்பன், வேணுகோபால், சிவசக்தி, நிர்மலா, சூர்யா உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: