கீழ்வேளூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பு குளத்தை அளக்க எதிர்ப்பு: பெண்கள் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு

கீழ்வேளூர்: கீழ்வேளூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த குளத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அகரக்கடம்பனூர் ஊராட்சி வடக்கு வெளியை சேர்ந்த சகோதர்கள் கணபதி, தெட்சிணாமூர்த்தி. வடக்கு வெளியில் உள்ள இடத்தை 1995ம் ஆண்டு நீதிமன்றம் 20 ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்துள்ளதாலும், அரசுக்கு தண்டதீர்வை செலு த்தி வருவதால் இடம் கணபதி, தெட்சிணாமூர்த்திக்கு என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த இடத்தின் அருகில் உள்ள குளம் கணபதி மற்றும் தெட்சணாமூர்த்தி குடும்பத்தின் அனுபவத்தில் பல ஆண்டு காலமாக இருந்து வந்தது. இந்த குள த்தை அதே வடக்குவெளி கிராமத்தை சேர்ந்த சிலர் மீட்டு தர வேண்டும் என்று கீழ்வேளூர் தாசில்தாரிடம் கூறியுள்ளனர்.

 இந்நிலையில் குளம் எங்கள் அனுபவத்தில் உள்ளதால் எங்களுக்கு தான் சொந்தம் என்று அவர்கள் கூறி வந்தனர். இது சம்பந்தமாக இரு தரப்பையும் வைத்து சமாதான பேச்சுவார்தை நடத்தப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று காலை கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய் துறையினர், வடக்கு வெளி கிராமத்திற்கு சென்றனர். பாதுகாப்புக்காக கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தை அளக்க சென்ற போது எங்கள் அனுபத்தில் பல ஆண்டுகளாக உள்ளதால் அந்த குளத்தை அளக்க கூடாது என்று கூறி சந்திரா என்பவர் மண்எண்ணையை தன்மீது ஊற்றி கொண்டு தீ வைக்க முயற்சி செய்தார்.

அப்போது அருகில் நின்ற பெண் போலீஸ், மண்எண்ணை கேனை பறித்து சந்திரா மீது தண்ணீர் ஊற்றினார். மற்றொரு பெண்ணும் தீக்குளிக்க முய ன்ற போது, போலீசார் தடு த்து நிறுத்தினர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் குளத்தை வருவாய் துறையினர் அளவீடு செய்து அந்த குளத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரியிடம் குளத்தின் நான்கு எல்லையையும் காட்டி ஒப்படைத்தனர். தீக்குளிக்க முயன்ற சந்திரா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: