கடவுள் முருகனின் துணை கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்குகிறோம் : தமிழக பாஜக தலைவர் எல். முருகன்!!

சென்னை : வேல் யாத்திரையை தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தனி புறப்பட்டார்.  தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்பட இருந்தது. அதன்படி திருத்தணியில் இன்று ஆரம்பிக்கப்பட இருந்த வேல் யாத்திரை இறுதியாக 6ம் தேதி திருச்செந்தூரில் முடியவிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி தர மறுத்தது. இருப்பினும் தடையே மீறி வேல் யாத்திரை நடத்திட பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் திருத்தணியில் சுமார் 10-1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்க காரில் தனது ஆதரவாளர்களுடன் தமிழக பாஜக தலைவர் முருகன் திருத்தணிக்கு சென்று கொண்டு இருக்கிறார். வேல் யாத்திரையை தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தனி புறப்பட்டார். முன்னதாக சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் கடவுளை வழிபட உரிமை உள்ளது.எனக்கு விருப்பமான முருகனை வழிபட திருத்தணி கோயிலுக்கு செல்ல உள்ளேன்.அரசியமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே கோயிலுக்கு செல்கிறேன். கடவுள் முருகனின் துணை கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையை தொடங்குகிறோம்.கடவுள் முருகனுக்கு யார்யார் எதிராக இருக்கிறார்களோ அவர்களின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை நடத்த உள்ளோம்,என்றார். அவருடன் பாஜக நிர்வாகிகளான வி.பி.துரைசாமி, கருநகராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் செல்கின்றனர்.

Related Stories: