இந்திய தூதரகம் அறிவிப்பு அமெரிக்காவில் விசா, பாஸ்போர்ட்க்கு ஆன்லைன் விண்ணப்பம்

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் எதிரொலியாக விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகமானது விசா, இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை, பாஸ்போர்ட், ஜிஇபி உள்ளிட்டவற்றுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும். இந்த விண்ணப்பங்களுக்கு இந்திய அரசின் கட்டணங்களுடன் கூடுதலாக ஒரு விண்ணப்பத்திற்கு 15.90 டாலர் வசூலிக்கப்படும். 4ம் தேதி ( நேற்று) முதல்  இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக விஎப்எஸ் நேரடி சேவைகள் இருக்காது. எனவே, அனைத்து விண்ணப்பங்களும் தபால் மூலம் மட்டுமே தீர்வு காணப்படும்,’  என கூறப்பட்டுள்ளது.

Related Stories: