மக்களிடம் கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளிகளை 16ம் தேதி திறக்கக்கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வரும் 16ம் தேதி 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தான் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. முகக்கவசம் அணிவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை மிகவும் சிரமமான செயலாகும். மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் கொரோனா ஆபத்து அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும்.  இந்த ஆபத்துகளை அரசு உணர வேண்டும்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும்.அதுவரை ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும். வல்லுனர்கள் குழு பரிந்துரைக்கும், கள எதார்த்தத்திற்கும் ஏற்ற வகையில் பாடங்களின் அளவை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: