கடையில் பதுங்கிய சிறுத்தை: வால்பாறையில் பரபரப்பு

வால்பாறை: கடையின் மொட்டை மாடியில் பதுங்கிய சிறுத்தையால் வால்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை டவுன் பகுதிகளான வாழைத்தோட்டம், கக்கன் காலனி, பி.ஏ.பி காலனி, கோ.ஆப் காலனி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களிலேயே சிறுத்தைகள் உணவுக்காக கோழி, நாய் மற்றும் ஆடுகளை அடிக்கடி வேட்டையாடுவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வால்பாறை வாழைத்தோட்டம் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் கடை ஒன்றின் மொட்டை மாடியில் பதுங்கி இறைச்சிக்காக விலங்குகளை வேட்டையாட காத்திருந்தது.

இதை அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் கேமராவில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தை அங்கிருந்து வனத்திற்குள் சென்று மறைந்தது. வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: