கொரோனாவால் 8 மாதங்கள் பூட்டிக்கிடந்தது திருவனந்தபுரம் மிருககாட்சிசாலை இன்று திறப்பு: மாஸ்க் முகங்களை கண்டு மிரளுமா விலங்குகள்?

திருவனந்தபுரம்: ெகாரோனா அச்சத்தால் மூடப்பட்ட திருவனந்தபுரம் மிருககாட்சிசாலை 8 மாதங்களுக்குப்பிறகு இன்று திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற மிருககாட்சிசாலை, மியூசியம், பூங்கா உள்ளது. மிருககாட்சிசாலையில் உள்ள பலவகை விலங்குகள், மியூசியத்தில் உள்ள பழம்பொருட்கள், பூங்காவை சுற்றிவந்து இளைப்பாறி செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ெகாரோனா அச்சம் காரணமாக மார்ச் 12ம் தேதிமுதல் திருவனந்தபுரம் மிருககாட்சிசாலை, மியூசியம், பூங்கா ஆகியவை மூடப்பட்டது. அதே வேளையில் ஊழியர்கள் விலங்குகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தனர்.

இருப்பினும் மனிதர்களை கண்டு பழக்கப்பட்ட விலங்குகள் கூட்டமாக மக்களை பார்க்காமல் சோர்ந்து போயின. உணவை உண்பதும், படுத்து உறங்குவதுமாக நாட்களை கழித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று முதல் மிருககாட்சிசாலை திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, மாஸ்க் அணிந்து மிருககாட்சிசாலைக்குள் செல்லலாம். இதேபோல் சமூக அகலம் கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், சளித்தொல்லைகள் உள்ளவர்களுக்கு அனுமதியில்லை என்று பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன.

ஆயினும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மனித முகங்களை கண்டு பழகிய விலங்குகள் முகக்கவசங்களுடன் வரும் சுற்றுலா பயணிகளை கண்டு மிரளலாம் என்று கருதப்படுகிறது. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் மாஸ்க் மனிதர்களை பார்த்து ஆவேசப்படலாம். இந்த நிலையில் திருவனந்தபுரம் மிருககாட்சிசாலைக்கு அடுத்த மாதம் புதிய வரவாக 3 ராஜலெம்பாக்களும், 2 பனிக்கரடிகளும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஆய்வு

திருவனந்தபுரம் அருகே நெய்யாறு திறந்தவெளி மிருககாட்சிசாலையில் கூண்டில் இருந்து தப்பிய 10 வயது பெண் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்த நிலையில் பூங்காவை கேரள வனத்துறை அமைச்சர் ராஜூ பார்வையிட்டார். அப்போது கூண்டில் இருந்து புலி தப்பியதில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகள், பூங்காவில் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறை செயலாளரை கேட்டுக்கொண்டார். புலியின் உடல்நிலை குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், பூங்காவில் விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளின் உறுதித்தன்மை பரிசோதித்து உறுதிசெய்யப்படும்.

விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க தனிக்கூண்டுகள் ஏற்படுத்தப்படும். புலி உடல்நலம் தேறியதும் மீண்டும் வயநாடு ெகாண்டு செல்லப்படும் என்றார்.

Related Stories: