எந்த அதிகாரமும் இல்லை: கில்கிட் பல்டிஸ்தான் பிராந்தியத்திற்கு தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்கிய பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

டெல்லி: கில்கிட் பல்டிஸ்தான் பிராந்தியத்திற்கு தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்கிய பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 70 ஆண்டுகளாக தீர்க்கப்பட்டாத சிக்கலாக இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதியான கில்கிட் பகுதிக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கில்கிட் பல்டிஸ்தான் பிராந்தியத்திற்கு தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கடும் எடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டபோதே கில்கிட் பல்டிஸ்தான் இந்தியாவிற்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். எனவே, கில்கிட் பல்டிஸ்தான் மீது எந்த அதிகாரமும் இல்லை என்றும் மனித உரிமை மீறலை மறைப்பதற்கே பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: