புதிய வேளாண் சட்டங்கள் நாட்டை பலவீனப்படுத்தும்: ராகுல்காந்தி தாக்கு

ராய்ப்பூர்: ‘மத்திய அரசின் வேளாண் சட்ங்கள், நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும்,’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சட்டீஸ்கர் மாநில உதயமான நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு முதல்வர் புபேஷ் பாகலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: கொரோனா நோய் தொற்று பரவல் சூழலில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் போன்ற பலவீனமான பிரிவுகள், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் விவசாயிகளின் நிலையை ஒவ்வொருவரும் அறிந்துள்ளோம். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை ஒவ்வொரு நாளும் படிக்கிறோம். நாடு இதை ஏற்றுக் கொண்டது போலவே இவை நடக்கின்றன. நாம் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக நாட்டில் உள்ள விவசாயிகள் தாக்கப்படுவதை கண்டு வேதனை அடைகிறேன். இந்த சட்டங்கள், நாட்டின் அடிதளத்தை பலவீனப்படுத்தி விடும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: