திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேக விழா

திருவண்ணாமலை: ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று, சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேக விழா நேற்று மாலை நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திருக்கோயில் கருவறையிலும், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்விக்கப்பட்டது.பவுர்ணமி மற்றும் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமிக்கு அன்னம் சாத்தும் சாயரட்சை காலத்தில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது மரபு கிடையாது.

எனவே, அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. அதன்பிறகு, அன்னாபிஷேகத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கோயில் மட்டுமின்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளிலும், திருநேர் அண்ணாமலை கோயிலிலும்  அன்னாபிஷேக விழா நடந்தது. மேலும், வழக்கம்போல் கிரிவலம் செல்ல நேற்றும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Related Stories: