எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் புதிதாக 1940 மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கம்: ஆளுநருடனான சந்திப்புக்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தனர். பின்னர் ஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ;செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவர் முதல்வர் பழனிசாமி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் புதிதாக 1940 மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்களில் 45% பேர் கல்லூரிகளில் படிக்கின்றனர். அகில இந்திய அளவில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 31% தான். அரசு பள்ளி மாணவர்கள் நடப்பாண்டு மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பது அரசின் நோக்கம். 7.5% உள்ஒதுக்கீடு 100% இடங்களில் இருந்தா? 69% இடஒதுக்கீட்டு இடங்களில் இருந்தா என்று நிருபர் கேள்வி எழுப்பினார். 7.5% உள்ஒதுக்கீட்டு இடங்களில் இதில் இருந்து தரப்படும் என்பதை விளக்க முடியாமல் அமைச்சர் குழம்பினார்.

7.5% உள் ஒதுக்கீட்டில் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், பயனடைவர் என்றார் ஜெயக்குமார். 69% இடஒதுக்கீட்டிலும் பிறப்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோர் பயனடைவர் என பதில் கூறினார். உள்ஒதுக்கீடு எஞ்சிய 31% இடங்களில் இருந்தா என்பதை அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுப்படுத்தவில்லை. நிருபரை பார்த்து இது கூட உங்களுக்கு தெரியாதா என்று கேட்டுவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார் ஜெயக்குமார்.

Related Stories:

>