பெண்ணின் தலை துண்டிப்பு பிரான்சில் சர்ச்சில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்: மேலும் இருவர் கத்தியால் குத்திக்கொலை

நைஸ்: பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்தின் அருகே நடந்த கத்தி குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் பலியாகினர். இதில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பு, கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சில் தலைநகர் பாரீசில் உள்ள பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பாட்டீ. இவர் வகுப்பறையில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் படத்தை மாணவர்களிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் கடந்த 21ம் தேதி, செசன்யா நாட்டை சேர்ந்த அப்துல்லா அன்சரோவ் என்பவனால் குத்தி கொலை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டார்.இச்சம்பவம் நடந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், நைஸ் நகரில் உள்ள நோட்ரே டாம் தேவாலயத்தின் அருகே நேற்று நடத்தப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் பலியாகினர். இதில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க சென்ற பலரும் காயமடைந்தனர்.

இந்த படுகொலைகள் குறித்து பிரான்ஸ் தீவிரவாத ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலைகளுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.

இது குறித்து நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தனது டிவிட்டரில், ``நகரின் நோட்ரே டாம் தேவாலயம் அருகே கத்தி குத்து சம்பவம் நடந்தது. தாக்குதல் நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவொரு தீவிரவாத செயலாகும்,’’ என கூறியுள்ளார்.

Related Stories: