ஊரடங்கு காலத்தில் வாங்கிய முன்பதிவு டிக்கெட் இருந்தால் விரும்பும் நேரத்தில் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: ‘ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டை வைத்துள்ள பக்தர்கள், எப்போது வேண்டுமானாலும் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்,’ என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா  ஊரடங்கு காரணமாக மார்ச் முதல்  ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், ஆன்லைன், அஞ்சலகம், இ-தரிசன கவுண்டர்கள் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனம்  மற்றும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட  ஆர்ஜித சேவைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள்  தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.

தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் ரத்து செய்தால், அவர்களின் முன்பணம் திரும்ப வழங்குவதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது. டிக்கெட்டை  இணையதளம் மூலம் ரத்து செய்து, தங்கள் வங்கிக் கணக்கில் பக்தர்கள் அதற்கான பணத்தை பெறலாம். ஆனால், டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பாதவர்கள்,  அந்த டிக்கெட் வைத்து எப்போது வேண்டுமானாலும் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, இந்த டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் இனிமேல் எப்போது வேண்டுமானாலும் திருப்பதி சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

டைரி, காலண்டர்கள்

‘பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் டைரி, காலண்டர்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால், தபால் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்,’ என்றும் தேவஸ்தானும் தெரிவித்துள்ளது.

Related Stories: