வடிகால் பராமரிப்பு இல்லாததால் புழல், செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்து: பொதுமக்கள் அவதி

புழல்: சென்னை மற்றும் புறநகர் பகுதியான புழல், செங்குன்றம்,  சோழவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது.  இந்நிலையில், புழல் லட்சுமிபுரம், ரெட்டேரி,  சூரப்பட்டு, புத்தாகரம்,  காவாங்கரை,  செங்குன்றம் வடகரை,  வடபெரும்பாக்கம்,  புள்ளிலைன்,  பாடியநல்லூர்,  நல்லூர்,  விஜயநல்லூர்,  சோழவரம் அலமாதி உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், சாலைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

எனவே, பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  குறிப்பாக சென்னை  -  கொல்கத்தா நெடுஞ்சாலை முதல் காவாங்கரை,  செங்குன்றம் பாடியநல்லூர்,  சோழவரம் காரனோடை பஜார் வரை  சாலையின் இரண்டு பக்கங்களிலும் குளம்போல் மழைநீர்  தேங்கிக்கிடக்கிறது.  இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி,  மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழை நீரை உடனுக்குடன் அதற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

Related Stories: