தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்..சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,  மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு தமிழக கடற்கரையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது என்றும் புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பாலவாக்கத்தில் 14.8 செ.மீ, பாடியில் 12.4 செ.மீ., ஜார்ஜ் டவுனில் 11.2 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. கொரட்டூரில் 10.1 செமீ அண்ணாநகரில் 10.1 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10.4 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. 2017 நவம்பருக்குப் பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories: