நிதிஷ்குமாருக்கு 15 ஆண்டுகள், மோடிக்கு 6 ஆண்டுகள் கொடுத்தும் பீகார் முன்னேறவில்லை: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு

தர்பங்கா: நிதிஷ்குமாருக்கு 15 ஆண்டுகள், மோடிக்கு 6 ஆண்டுகள் கொடுத்தும் பீகார் முன்னேறவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தர்பங்காவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; நிதிஷ்குமாருக்கு 15 ஆண்டுகள், மோடிக்கு 6 ஆண்டுகள் கொடுத்தும் பீகார் முன்னேறவில்லை. 15 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகும் பீகார் மிக ஏழ்மையான மாநிலமாகவே உள்ளது. பீகார் மக்கள் மனதில் இருப்பதை அறிந்து ஆட்சி செய்ய தெரியும். எங்களுக்கு பொய் சொல்ல தெரியாது, ஆனால் நீங்கள் மாறுவீர்களா? இங்கு கூடியிருக்கும் பெரும் திரளான கூட்டத்தை மாற்றத்திற்கான மக்களாக பார்க்கிறேன்.

பிற நாடுகளைப் பற்றி பேசும் பிரதமர் மோடி வேலையின்மை போன்ற உள்நாட்டு பிரச்சனைகளை பேசுவதில்லை. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது பெரும் முதலாளிகள் யாரவது வாங்கி வாசலில் நின்றனரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: