பெருவாயல் டிஜெஎஸ் கல்வி குழுமத்தில் விஜயதசமி விழா கொண்டாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் கல்வி குழுமத்தின் சார்பில் டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி இணைந்து விஜயதசமி விழாவினை நேற்று முன்தினம் நடத்தியது. இந்த விழாவிற்கு டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நிகழ்வில் டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் பழனி மற்றும் டிஜெஎஸ் சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளி தாளாளர் ஜி.தமிழரசன், டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம், டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சுகாதாதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பங்கேற்ற டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். மேலும் டிஜெஎஸ் கல்விக் குழுமம் சார்பில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத ஏழை மாணவர்கள் 10 பேருக்கு ஆன்ட்ராய்டு செல்போனை டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

Related Stories: