சீனாவுடன் போருக்கு தேதி குறிச்சாச்சு... பாஜ தலைவர் சர்ச்சை

லக்னோ: சட்டப்பிரிவு 370 நீக்கம், ராமர் கோயில் கட்டியது போன்றவற்றை போல சீனாவுக்கு எதிராக போர் புரிவதற்கான தேதியையும் பிரதமர் மோடி தீர்மானித்துவிட்டதாக உபி பாஜ தலைவர் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ள சிக்கந்தர்பூர் தொகுதி பாலியா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், பாஜ மாநில தலைவர் ஸ்வதந்தர தேவ் பங்கேற்றார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘என்ன நடக்க வேண்டும், ஏது நடக்க வேண்டும் என்ற அனைத்திற்கும் பிரதமர் மோடி தேதியை தீர்மானித்து விட்டார்.

அதன்படிதான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. ராமர் கோயில் பூஜை நடத்தப்பட்டது. அதுபோலத்தான் எல்லையில் வாலாட்டும் சீனா, பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதற்கான தேதியையும் மோடி குறித்துவிட்டார்’ என்று பேசியுள்ளார். இந்த வீடியோ பெரும் வைரலாகி உள்ளது. அதோடு, இந்தியா போர் தொடுக்க உள்ளதாக கூறியதால் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பதிலளித்த ஸ்வதந்தர தேவ், ‘‘நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: