ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்தன சரணாலயமாக மாறிய செஞ்சி பொன்பத்தி ஏரி

மேல்மலையனூ: செஞ்சி பொன்பத்தி ஏரியில் ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்து சரணாலயம் போன்று காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எல்லைக்குட்பட்ட பொன்பத்தி ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது செஞ்சி முதல் பொன்பத்தி வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். கடந்த காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக இந்த ஏரிக்கு அதிகளவு நீர் வந்தது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் தற்போது ஏரியில் அதிகளவு நீர் தேங்கியுள்ளது. ஏரியின் நடுவே உள்ள கருவேல மரங்கள் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.

இதனால் பறவைகள் இவ்விடத்தை தேடி வருவது அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுவதால் ஏரி பகுதி பறவைகள் சரணாலயம் போன்று காட்சியளிக்கிறது. இதனை செஞ்சி சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த ஏரியில் பறவைகள் அதிகளவு வந்து தங்குவதை பார்ப்பதற்கு புதிய அனுபவமாக இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இப்பறவை இனங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: