மஞ்சூர் அருகே மாவோயிஸ்ட் விழிப்புணர்வு கூட்டம்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பெள்ளத்திகம்பை பழங்குடியினர் கிராமத்தில் மாவோயிஸ்ட் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலதுறை அலுவலர் கவுசல்யா தலைமை தாங்கினார். ஊட்டி ரூரல் டி.எஸ்.பி. அருண், குந்தா தாசில்தார் மகேஸ்வரி, சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இந்திரா, கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், வனவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா வரவேற்றார். முன்னதாக பொதுமக்கள் தரப்பில் குறைகள் கேட்டறியப்பட்டது. இதை தொடர்ந்து பொது பயன்பாட்டிற்காக பெள்ளத்திகம்ைாயில் சமுதாயகூடம் அமைத்து தர வேண்டும்.

இலவச வீடுகட்டி தரவேண்டும் மற்றும் முதியோர் உதவி தொகை, தையல் இயந்திரங்கள் கேட்டு மக்கள் மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதி சான்று மற்றும் 14 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து எஸ்.ஐ.ராஜ்குமார் பேசும்போது, கிராமத்திற்குள் சந்தேகப்படும்படியான அந்நிய நபர்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக  காவல்நிலையம் மற்றும் அருகில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories: