ஆத்தூரில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது 23க்கு சேலை, சட்டை விற்ற புதிய ஜவுளிக்கடைக்கு ‘சீல்’: கட்டுக்கடங்காத கூட்டத்தால் அதிகாரிகள் அதிரடி

ஆத்தூர்: ஆத்தூரில், புதியதாக திறக்கப்பட்ட ஜவுளி கடையில், சிறப்பு சலுகையாக 23க்கு சேலை, சட்டை விற்பனை செய்யப்பட்டது. இதை வாங்குவதற்காக சமூக இடைவெளி இன்றி பெரும் கூட்டம் கூடியதால், நகராட்சி அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டையில் நகராட்சி அலுவலகத்தின் எதிர் புறம் கடந்த 3 ஆண்டுகளாக துணிக்கடையை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த கடையை ஒட்டி இருந்த மற்றொரு கடையில், அவர்களே நேற்று புதிய கிளையை தொடங்கியுள்ளனர். புதிய கிளையின் துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று 23ம் தேதியை கருத்தில் கொண்டு ₹23க்கு பெண்களுக்கு சேலை ஒன்றும், ஆண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரெடிமேட் சர்ட் ஒன்றும், சலுகை விலையில் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இதையறிந்தவுடன் ஏராளமான பெண்களும், இளைஞர்களும் கடைக்கு படையெடுத்து வந்தனர். இதனால், கடைக்குள் ஆள் நுழைய முடியாத அளவிற்கு, கூட்டம் அலைமோதியது. ஒரு கட்டத்தில் ஸ்டாக் இல்லை என திருப்பி அனுப்பினர். ஆனாலும், கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாசில்தார் அன்புசெழியன் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் ெசன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சலுகை விலையில் விற்பனை செய்ததையும் கண்டித்து, கடைக்கு சீல் வைத்தனர்.

Related Stories: