இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் வழக்கு

சென்னை: இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, விசிக தலைவர் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மத ரீதியாக பிரிவுகளுக்கிடையே பகைமையை தூண்டுதல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டும் என்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை பேசி வேண்டும் என்ேற மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிப்படுத்துதல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகியவை திருமாவளவன் மற்றும் பெரியார் யூ-டியூப் சேனல் நடத்துபவர்கள் செய்து வருகின்றனர்.

திருமாவளவன் என்ற நபர், “இந்து பெண்கள் அனைவருமே விபசாரிகள் தான்” என்று கொச்சையாக பேசியுள்ளார். மேலும் இந்து சாஸ்திரங்களில் இதுபோன்று இருப்பதாக ஒரு பொய்யான, அவதூறான கருத்தை பதிவிட்டுள்ளார். இது ேவண்டும் என்ேற ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் நோக்கிலும் மதரீதியான பிரிவுகளுக்கிடையே பகைமையை தூண்டும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து பெண்களை கொச்சைப்படுத்தி அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை கொச்சைப்படுத்தும் ேநாக்கில் பேசியுள்ளார். எனவே திருமாவளவன் மற்றும் பெரியார் யூ-டியூப் சேனல் நிர்வகிப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகாரின்படி, மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பெரியார் யூ-டியூப் சேனல் நிர்வாகிகள் மீது ஐபிசி 153, 153ஏ(1)(ஏ), 295ஏ, 298, 505(1)(பி), 505(2) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பாஜவினர் அளித்த புகாரின்படி திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: