கடையநல்லூரில் போலி நகை விற்பனையா?..விற்பனையை தடுக்க திட்டமிட்டு பொய் பிரச்சாரம் என நகை வியாபாரிகள் கருத்து

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் போலி நகை விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியதை அடுத்து நகை வியாபாரிகள் திட்டவட்டமாக இதனை மறுத்துள்ளனர். கடையநல்லூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளது.

இந்து நகை வாங்கிய ராமர் என்பவர் புளியங்குடியில் உள்ள நகை கடையில் நகைகளை விற்க முயன்றுள்ளார். அந்த நகைகளை பரிசோதித்த புளியங்குடி நகை வியாபாரிகள் இந்த நகை போலி என்று கூறியதால், ராமர் கடையநல்லூரில் நகை கடையில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலி நகை விற்பனையை திட்டவட்டமாக மறுத்துள்ள கடையநல்லூரில் நகை வியாபாரிகள், விற்பனையை தடுக்கவே புளியங்குடியை சேர்ந்த நகை வியாபாரிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக நகை வியாபாரம் செய்து வரும் தங்களின் மதிப்பை குறைக்கவே இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக கடையநல்லூரில் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். அரசாங்க தரக்கட்டுப்பாடு மையத்தில் தங்களிடம் வாங்கப்படும் நகைகளை சோதனை செய்து கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: