சென்னை : மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பிறந்தநாளையொட்டி முதல்வர் பழனிசாமி, எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், நாட்டிற்கே சேவை செய்யும் தங்களுக்கு வல்லமையை வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.