அயராத உழைப்பால் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூர்கிறேன் : முதல்வர் பழனிசாமி ட்வீட்!

சென்னை : காவலர் வீரவணக்க தினத்தையொட்டி, முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர். அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் டிஜிபி திரிபாதியும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், காவலர் வீரவணக்க தினத்தில் அவர்களின் தியாகத்தை நினைவு கூறுவதாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்” சமூகத்தின் பாதுகாவலனாய், பொதுமக்களின் உற்ற தோழனாய், அர்ப்பணிப்பின் இலக்கணமாய், தங்களின் அயராத உழைப்பால் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை தேசிய காவல்துறை தின நாளில் நினைவு கூர்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: